May 05, 2018 02:27 PM

திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்!

திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் நடிகர் ஆர்யாவும் ஒருவர்.

 

ஆர்யா வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் மைடியர் குஞ்சுமணி. இந்த ஆண்டு வெளியாகும் உங்கள் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டும் திரிஷாவின் பிறந்தநாளுக்கு இதே பாணியில் வாழ்த்து தெரிவித்திருந்த ஆர்யா, இந்த முறையும் அதே வார்த்தையை பயன்படுத்தியதற்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

ஒரு நடிகையை குஞ்சுமணி என்று அழைப்பதா? உங்களுக்கு வேறு நல்ல வார்த்தையே கிடைக்கவில்லையா? பெண்களை மதிக்க தெரியாதா? என்று பல ரசிகர்கள் ஆர்யாவிடம் கேள்வி எழுப்பி அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.