அதுல்யாவுக்கு திருமண ஏற்பாடு! - வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளின் வரவு என்பது ரொம்பவே அறிதான ஒன்று தான். அப்படியே வந்தாலும், சிறு சிறு வேடங்களில் நடித்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். ஆனால், அதுல்யா விஷயத்தில் அப்படி அல்ல. அறிமுகப்படத்திலெயே அனைவரையும் கவர்ந்தவர் தற்போது முன்னேற்றப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்படும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது உண்மையான திருமணம் அல்ல, அவர் தற்போது நடித்துவரும் ’நாடோடிகள் 2’ படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார், அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, அதுல்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

