Apr 12, 2018 12:47 PM
‘லென்ஸ்’ பட இயக்குநர் படத்தை தயாரிக்கும் பாலா!

’நாச்சியார்’ படத்தை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கும் ‘வர்மா’ படத்தை பாலா இயக்கி வருகிறார். இத்துடன் தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஒரு படத்தை பாலா தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
’லென்ஸ்’ என்ற படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், தான் பாலா தாயரிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ‘லென்ஸ்’ விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றதோடு, பல்வேறு சர்வதேச விருதுகளையும் வெற்றது. இப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.