Jun 04, 2018 01:32 PM

’பிக் பாஸ் 2’ எப்போது ஆரம்பம்? - அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

’பிக் பாஸ் 2’ எப்போது ஆரம்பம்? - அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிப் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ்-ன் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நிகழ்ச்சி குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கின்றனர். 

 

இதற்கிடையே, நிகழ்ச்சி பற்றிய புரோமோஷன் வீடியோக்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதால், நிகழ்ச்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து வரும் நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

 

வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பங்கேற இருக்கும் போட்டியாளர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

 

பிக் பாஸ் முதல் பாகத்தில் பங்கேற்ற ஓவியா, சினேகன், ஜுலி உள்ளிட்ட பலர் மக்களிடம் பெரும் பிரபலமானதால், இரண்டாம் பாகத்தில் பங்கேற்க பல முன்னணி பிரபலங்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.