May 20, 2018 06:30 AM
'பிக் பாஸ் 2’ போட்டியாளர்களின் எண்ணிக்கை தகவல் லீக்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியான ‘பிக் பாஸ் 2’ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
இதற்கிடையே, இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் என்று, ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தாலும், இதுவரை தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் இரண்டாம் பகுதியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்கள் யார் யார், என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், சில அரசியல் பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.