சிவாஜி குடும்பத்து மருமகளாகும் பிக் பாஸ் சுஜா வருணி!

மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சுஜா வருணி, விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும், சுஜா வருணியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்ததாம். இதையடுத்து விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
’சிங்கக்குட்டி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது எந்த படமும் இன்றி அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.