Apr 27, 2018 05:08 AM

திருமணத்திற்கு மறுத்த ஆர்யா மீது வழக்கு! - மிரட்டும் டிவி அக்ரிமெண்ட்

திருமணத்திற்கு மறுத்த ஆர்யா மீது வழக்கு! - மிரட்டும் டிவி அக்ரிமெண்ட்

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் மாப்பிள்ளையான நடிகர் ஆர்யா, தனது வாழ்க்கையை துணையை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டினாலும், நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல, திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

 

16 பெண்ககளில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார், என்ற விளம்பரத்தோடு ஒளிபரப்பாகி மக்களிடன் வரவேற்பை பெற்ற அந்நிகழ்ச்சியின் இறுதியில், ஒருவரை மட்டும் திருமணம் செய்தால் அது மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும், அதனால் இதில் பங்கேற்ற யாரையும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன், என்று ஆர்யா கூறினார்.

 

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்கும் போது, 16 பெண்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன், என்று, டிவி சேனலிடம் அக்ரிமெண்ட் போட்டு தான் ஆர்யா நிகழ்ச்சியில் பங்கேற்றாராம். ஆனால், அப்படி அவர் செய்யாததால், அந்த டிவி சேனல் நினைத்திருந்தால் அவர் மீது வழக்கு போட்டிருக்கலாமாம்.

 

ஆனால், ஆர்யாவின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அந்த டிவி சேனல் அப்படி செய்யவில்லை, என்று அந்ந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலந்துக்கொண்ட நடிகை சங்கீதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.