Apr 09, 2018 07:12 AM

சென்சார் குழு அதிகாரி மூலம் வெளியான ‘காலா’ விமர்சனம்!

சென்சார் குழு அதிகாரி மூலம் வெளியான ‘காலா’ விமர்சனம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்சார் சான்றிதழுக்காக திரையிடப்பட்ட காலா படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 14 கட் கொடுத்ததோடு, படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால், மேல் முறையீடு செய்ய காலா படக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும், இம்மாதம் 27 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. இதற்குள்ளாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், ’காலா’ படத்தின் விமர்சனத்தை சென்சார் குழு அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐக்கிய அரபு நாடுகள் (UAE)யை சேர்ந்த பத்திரிகையாளரும் சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சாந்து என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “காலா பர்ஸ்ட் காபி வந்துவிட்டது. மாஸ் என்டெர்டெயினர். இதற்கு முன் உள்ள கோலிவுட் சாதனைகளை இந்த படம் முறியடித்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.