Apr 28, 2018 06:44 AM

பைனான்சியரின் கிரிமினல் வழக்கு - நேரில் ஆஜராக ரஜினிக்கு நீதிமன்றம் உத்தரவு

பைனான்சியரின் கிரிமினல் வழக்கு - நேரில் ஆஜராக ரஜினிக்கு நீதிமன்றம் உத்தரவு

ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா மீது சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, என்பவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். மேலும், ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரிராஜாவுக்கு கடன் கொடுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், இதை மறுத்த ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா, முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார். 

 

ரஜினிகாந்தின் இந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறிய முகுந்த்சந்த் போத்ரா, ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.