May 15, 2018 06:34 AM

நம்பர் ஒன் ஆன டிடி! - வாழ்த்தும் பிரபலங்கள்

நம்பர் ஒன் ஆன டிடி! - வாழ்த்தும் பிரபலங்கள்

திரைப்பட நடிகைக்கு இணையாக டிவி நடிகைகளும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார்கள். டிவி சீரியல்கள், டிவி தொகுப்பாளினிகள் என மக்களிடம் பிரபலமாகும் இவர்களில் பலர் வெள்ளித்திரையிலும் ஜொலிக்கவும் செய்கிறார்கள்.

 

அந்த வரிசையில் டிவி தொகுப்பாளினிகளில் ரொம்பவே பிரபலமானவர் டிடி தான். பிரபலம் மட்டும் அல்லாமல் சில சர்ச்சைகளிலும் டிடி சிக்கினாலும், மக்களிடம் இருக்கும் அவரது மவுசு மட்டும் குறையவே இல்லை.

 

திருமணத்திற்குப் பிறகு டிவி யில் அவ்வளவாக தலைக்காட்டாத டிடி, கணவரை பிரிந்த பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியிருப்பதோடு, மீண்டும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருவதோடு, பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்று தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்களால் விரும்பத்தக்க பிரபலம் யார்? என்ற தலைப்பில் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் டிடி தான் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

 

இவரை தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த பிரபலங்களின் விவரம் இதோ:

 

திவ்யதர்ஷினி

கீர்த்தி

நக்ஷத்ரா

ரம்யா

வாணி போஜன்

சைத்ரா ரெட்டி

ஆல்யா மானசா

சரண்யா

அஞ்சனா

நித்யா ராம்

 

மக்களுக்கு பிடித்த டிவி பிரபலங்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள டிடி-க்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.