Apr 10, 2018 04:08 PM

இயக்குநர் பாரதிராஜா திடீர் கைது!

இயக்குநர் பாரதிராஜா திடீர் கைது!

காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, நடைபெற்று வரும் போராட்டத்தை திசை திருப்பும் என்பதால், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு போராட்டக்காரகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

இதற்கிடையே, இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இடையிலான ஐபில் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் ஐபில் நிர்வாகம் போட்டியை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது.

 

இதனை தொடர்ந்து, கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் அருகே போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு கட்சியின் கூறி வந்த நிலையில், பிற்பகல் இரண்டு மணி முதல் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.

 

இந்த நிலையில், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வா.கெளதமன், நடிகர் கருணாஸ், வைரமுத்து ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.  

சிறிது நேரம் கழித்து போலீசார் பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ் உள்ளிட்ட போராட்டகாரர்களை கைது செய்தனர்.