Apr 10, 2018 10:32 AM

இயக்குநர்களுடன் நிர்வாணமாக சாட் செய்தேன் - நடிகை ஏற்படுத்திய சர்ச்சை!

இயக்குநர்களுடன் நிர்வாணமாக சாட் செய்தேன் - நடிகை ஏற்படுத்திய சர்ச்சை!

தமிழ் சினிமாவில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பலரின் தூக்கத்தை கெடுத்தது போல, தற்போது தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பலரை நடிகை ஸ்ரீ ரெட்டி பீதையடைய செய்துள்ளார்.

 

தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள், தானும் வாய்ப்புக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தினமும் புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறார். 

 

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் நிர்வாணமாக சாட் செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டுடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டுடியோக்களை பிராத்தல்கள் போன்று பயன்படுத்துகிறார்கள்.

 

ஸ்டுடியோக்கள் சிவப்பு விளக்கு பகுதி போன்று உள்ளன. ஸ்டுடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். மேலும் போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள். அரசும் இதை கண்டுகொள்ளாது, என்று கூறியுள்ள அவர், வட நாட்டில் இருந்த் உவரும் நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதால் அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதாகவும், தெலுங்கு பேசும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்வது இல்லை, அதனால் அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

 

பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தன்னிடம் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொல்லியதோடு, நிர்வாணமாக சாட் செய்யவும் தன்னை வற்புறுத்தியுள்ளார்கள். நானும் அதன்படி செய்திருக்கிறேன். அதற்கான ஆதாரத்தை விரைவில் நான் வெளியிடுவேன், என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருப்பது தெலுங்கு சினிமாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.