Apr 12, 2018 11:33 AM

விஜய், அஜித் பட நடிகைக்கு வந்த கஷ்ட்டம் - கண்ணீர் விட்டு கதறுகிறார்!

விஜய், அஜித் பட நடிகைக்கு வந்த கஷ்ட்டம் - கண்ணீர் விட்டு கதறுகிறார்!

விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் சார்மிளா. தமிழ் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கும் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

 

கணவருடன் விவாகரத்து பெற்று தனது மகனுடன் வசித்து வரும் சார்மிளா, தற்போது வறுமையில் வாடுகிறாராம். ஒரு காலத்தில் தான் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்காமல், செலவழித்துவிட்டு தற்போது வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டு வரும் அவர், வயதான காலத்தில் மிகவும் சிரமப்படுவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

விவாகரத்திற்குப் பிறகு ஏகப்பட்ட கஷ்ட்டங்களை அனுபவித்து விட்டதாக கூறும் அவர், தன் மகனின் பள்ளி செலவுகளை நடிகர் சங்கம் மற்றும் விஷால் செய்து வருவதாகவும், தனக்கென்று இருந்த வீட்டையும் விற்றுவிட்டு, தற்போது வாடகை வீட்டில் இருக்கிறாராம்.

 

தன் அம்மாவின் மருத்துவ செலவுக்கு மட்டும் மாதம் ரூ.10,000 ஆயிரம் செலவு ஆவதாக கூறிய சார்மிளா, படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பினால் கடன் கொடுத்தவர்கள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள், என்று கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.