May 18, 2018 08:12 AM

பிரபல திரைப்பட இயக்குநர் தற்கொலை முயற்சி!

பிரபல திரைப்பட இயக்குநர் தற்கொலை முயற்சி!

தெலுங்கு சினிமாவில் பிரபல எழுத்தாளராக இருக்கும் ராஜசிம்ஹா, அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதியுள்ளார். மேலும், நித்யா மேனன் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.

 

இந்நிலையில் இயக்குநர் ராஜசிம்ஹா, மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். 

 

இந்த சமப்வம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், சினிமாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜசிம்ஹா மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் தான் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளனர்.