Apr 11, 2018 07:22 AM

ஆர்யாவின் மீசைக்காக காத்திருக்கும் பிரபல இயக்குநர்!

ஆர்யாவின் மீசைக்காக காத்திருக்கும் பிரபல இயக்குநர்!

’இஞ்சி இடுப்பழகி’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘கடம்பன்’ என்று தொடர் தோல்விப் படங்களை கொடுத்திருக்கும் ஆர்யா, அமீர் இயக்கத்தில் ‘சந்தனத்தேவன்’ மற்றும் ‘ஹர ஹர மஹாதேவகி’ என்ற ஆபாச படத்தை எடுத்த இயக்குநர் இயக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்கள் வெற்றி பெற்றால் தான் அவரது கோடம்பாக்க வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

 

இதற்கிடையே, பிரபல டிவி சேனல் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் கமிட் ஆனா ஆர்யா, தற்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். காரணம், அவர் எதிர்ப்பார்த்ததை விட டிவி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. காரணம், ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அதே சமயம், ஆர்யா சந்தோஷமாக இருக்கும் அளவுக்கு அவரை வைத்து ‘சந்தனத்தேவன்’ படத்தை இயக்கும் இயக்குநர் அமீர் சந்தோஷமாக இல்லையாம். இயக்குநராக தொடர் வெற்றிகளை கொடுத்த அமீர், ஒரு சில தோல்விப்படங்களை கொடுத்திருப்பதால், ‘சந்தனத்தேவன்’ படத்தின் மூலம் தான் விட்ட இடத்தை பிடிக்க நினைக்கிறார். ஆனால், ஆர்யா அதற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

 

மதுரையை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் ஆர்யா ஜல்லிக்கட்டு வீரர் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக கம்பீரமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய மீசை கெட்டப் வைத்திருந்த ஆர்யா, டிவி நிகழ்ச்சிக்காக அந்த மீசையை எடுத்துவிட்டார். தற்போது அந்த டிவி நிகழ்ச்சி முடிந்தால் தான் மீண்டும் அதே பெரிய மீசையை வளர்க்க முடியும் என்பதால், ‘சந்தனத்தேவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

Director Ameer

 

முழு படப்பிடிப்பும் முடிய இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தாலும், அவற்றை படமாக்க ஆர்யா பெரிய மீசையுடன் வரவேண்டும் என்பதால், தற்போது இயக்குநர் அமீர் ஆர்யாவை விட அவரது மீசைக்காக தான் காத்திருக்கிறாராம்.