May 06, 2018 01:14 PM

பிரபல டிவி தொகுப்பாளினி விபத்தில் சிக்கி மரணம்!

பிரபல டிவி தொகுப்பாளினி விபத்தில் சிக்கி மரணம்!

சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகளைப் போல, தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல மலையாள தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருபவர் சூர்யா வாசன்.

 

இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்த போது, வேன் ஒன்று திடீரென்று இவரது ஸ்கூட்டர் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சூர்யா வாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

 

surya vasan

 

29 வயதான சூர்யா வாசனின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.