Jun 05, 2018 05:32 AM

நடிகை கஸ்தூரியை ஐட்டம் என்று விமர்சித்த ரசிகர்!

நடிகை கஸ்தூரியை ஐட்டம் என்று விமர்சித்த ரசிகர்!

டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தற்போது கஸ்தூரி தான் முதலிடத்தில் இருக்கிறார். ரசிகர்களின் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் என்று அனைத்திற்கும் பதில் அளித்து வரும் இவர், சில சமயங்களில் எல்லை மீறும் ரசிகர்களுக்கும் தைரியமாக பதில் அளித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகை கஸ்தூரியை ரசிகர் ஒருவர் ஐட்டம் என்று டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். “நடிகைகள் அனைவரும் ஐட்டம் தான், அதிலும் நீங்க செம ஐட்டம்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

 

ரசிகரின் இத்தகைய பதிவால் பெரும் கோபம் கொண்ட கஸ்தூரி, ”செத்துடு” என்று அவருக்கு பதில் அளித்திருக்கிறார்.

 

விரைவில் வெளியாக உள்ள ‘தமிழ்ப் படம் 2’ வில் நடிகை கஸ்தூரி ஒரு கவர்ச்சிப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.