Apr 13, 2018 06:16 AM

தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்க வில்லை - கார்த்தி விளக்கம்!

தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்க வில்லை - கார்த்தி விளக்கம்!

சமீபத்தில் வெளியான ‘நீடி நாடி ஓகே கதா’ என்ற தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் இயக்குநர் ரவி உடுகுலா கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும், அப்படம் தமிழ் மற்றும் தெல்கு என இரு மொழிகளில் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாயின.

 

ஆனால், கார்த்தி தரப்பு இதை மறுத்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, தனது அடுத்தப் படத்தை சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்தவுடன் தொடங்க இருக்கிறாராம்.

 

இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை ‘கார்த்தி 17’ என்று அழைக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.