Mar 30, 2019 09:02 AM
இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசை! - மனம் திறந்த பிக் பாஸ் ரைசா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, ஹீரோயினாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன.
தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும் ரைசா, ‘ஆலிஸ்’ என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசியிருக்கும் ரைசா, தான் யாரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, நடிகர் தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரில் யார் கிடைத்தாலும், திருமணம் செய்துகொள்ள ரெடி, என்று ரைசா தெரிவித்துள்ளார்.