May 09, 2018 02:21 PM

டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும்‘இரும்புத்திரை’!

டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும்‘இரும்புத்திரை’!

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ள இப்படம் வரும் மே 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

இந்த நிலையில், இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக புதிய முயற்சியை ‘இரும்புத்திரை’ குழுவினர் இன்று செய்தனர். அதாவது படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, படத்தின் முதல் பாகத்தை மட்டும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டினார்கள். இந்த முறை ஹாலிவுட் சினிமாவில் வழக்கத்தில் இருந்தாலும், இந்திய சினிமாவில் இது தான் முதல் முறை.

 

”முதல் பாகத்தை பத்திரிகையாளர்கள், இரண்டாம் பாகத்தையும் இப்பொழுதே போட்டிருக்கலாமே” என்று சொல்லும் அளவுக்கு படம் படு விறுவிறுப்பாக இருந்தது. விஷாலுக்கு இப்படம் பெரிய வெற்றிப் படமாக அமையும், என்பதை முதல் பாகமே நிரூபித்துவிட்டது.

 

படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் மித்ரன், “எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது  இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது. காரணம் இரும்புத்திரை படத்துக்கு சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திரை திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும். இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்.” என்றார்.

 

ஆதார் குறித்து படத்தில் தவறான கருத்துக்கள் பேசப்பட்டு இருப்பதாக கூறி, ‘இரும்புத்திரை’ படத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.