May 20, 2018 06:31 AM

‘இருட்டு அறை’ பட இயக்குநரின் அடுத்தப் படமும் பலானப் படம் தானாம்!

‘இருட்டு அறை’ பட இயக்குநரின் அடுத்தப் படமும் பலானப் படம் தானாம்!

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படத்திற்கு திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அப்படம் பெரும் லாபத்தை ஈட்டியது தான் உண்மை. அப்படத்தை தயாரித்த நடிகர் சிவகுமாரின் உறவினரான ஞானவேல்ராஜா, செம குஷியில் இருக்கிறார்.

 

இந்த நிலையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவுக்கு அப்பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் வந்திருக்கிறாராம்.

 

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இரட்டை அர்த்த வசனங்களை தூக்கலாக வைக்க முடிவு செய்துள்ள இயக்குநர், யார் எப்படி எதிர்த்தாலும், தொடர்ந்து இதுபோன்ற ஆபாச படங்களை எடுத்தே தீருவேன் என்ற முடிவில் இருக்கிறாராம்.

 

ஆனால், இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நடிக்க மாட்டார் என்பது உறுதியானதால், அவருக்கு பதிலாக வேறு யாரையாவது ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.