Jun 04, 2018 02:07 PM

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’மொழி’. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் ‘காற்றின் மொழி’ படத்தில் இணைகிறது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக ஜி.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது. 

 

இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். சென்னையில் இன்று தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற உள்ளது. 

 

விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.எச்.காஷீப் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கதிர் கலையை நிர்மாணிக்கின்றார். உடை வடிவமைப்பை பூர்ணிமா கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். பொன் பார்த்திபன் வசனம் எழுத, மக்கள் தொடர்பு பணியை ஜான்சன் கவனிக்கிறார்.

 

ஒரே கட்டத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு, வரும் அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.