May 31, 2018 07:31 AM
சூடுபிடிக்கும் ‘காலா’ வியாபாரம்!

ரஜினிகாந்தின் படங்கள் தியேட்டர்களில் ஓடி லாபத்தை ஈட்டுகிறதோ இல்லையோ, படத்தை மையப்படுத்தி தயாரிக்கும் பொருட்களில் வியாபாரம் ரொம்ப நல்லாவே சூடுபிடிக்கிறது.
‘கபாலி’ படத்தின் போது, அந்த தலைப்பை வைத்து பல விளம்பரதாரர் பொருட்கள் சந்தைக்கு வந்து சக்க போடு போட்ட நிலையில், தற்போது ‘காலா’ படத்திற்கு அத்தகைய வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது.
உயர்ந்த தரமான தொலைபேசி கவர்கள், காபி குவளைகள், சுவரொட்டிகள், டி- சர்ட்ஸ், லேப்டாப் ஸ்லீவ்ஸ் என பல்வேறு பொருட்கள் காலா ரஜினிகாந்தின் படங்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.