May 05, 2018 07:27 AM

‘காலா’ பட இசை வெளியீட்டு விழா குறித்த முழு தகவல் இதோ!

‘காலா’ பட இசை வெளியீட்டு விழா குறித்த முழு தகவல் இதோ!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீடு வரும் மே மாதம் 9 ஆம் தேதி நடைபெற இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அறியாதது எங்கே, எப்படி நடைபெற இருக்கிறது என்பது. இதோ, அதன் முழு தகவல்.

 

சென்னை நந்தனத்தின் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தான் ‘காலா’ பட இழை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி லைவாக ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூபிலும் ஒளிபரப்பாக உள்ளது.

 

இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன், தனது Dopeadelicz & RAP குழுவினருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் நேரடி இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

 

இப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும் இணைந்து ‘காலா’ படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினையும் நேரடியாக இணையத்தில் வெளியிட உள்ளனர்.

 

இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காணலாம்:

 

https://www.facebook.com/OfficialWunderbarFilms/

https://twitter.com/wunderbarfilms

https://www.youtube.com/wunderbarstudios