சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன் - எதற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், வியாபர ரீதியாகவும் முன்னணியில் இருக்கிறார். தற்போது இவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் படங்களாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் ரசிகர்களால் மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார். அவரது படங்களில் கமல்ஹாசனை கிண்டல் செய்வதாக கூறி கமல் ரசிகர்கள் சிவா மீது இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு சிவா எங்கு சென்றாலும் தக்க பாதுகாப்புடன் தான் சென்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சம்பவத்தை அறிந்த நடிகர் கமல்ஹாசன், தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார்.