Apr 13, 2018 06:09 AM

அர்ஜூன் வீட்டு மருமகளாகும் கன்னட நடிகை!

அர்ஜூன் வீட்டு மருமகளாகும் கன்னட நடிகை!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மேக்னா ராஜ். கன்னட சினிமாவைச் சேர்ந்த இவர் அங்கு பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மூன்று படங்களுக்கு மேல் தாண்டாதவர், தற்போது தமிழ் நடிகர் அர்ஜூன் வீட்டு மருமகளாகப் போகிறார்.

 

நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும், திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

 

சிரஞ்சீசி சார்ஜா - மேக்னா ராஜ் திருமணம் வரும் மே 2 ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற உள்ளது.