Apr 12, 2018 11:55 AM

கே.வி.ஆனந்த் விட்டதை நலன் குமாரசாமி பிடிச்சிட்டாரு!

கே.வி.ஆனந்த் விட்டதை நலன் குமாரசாமி பிடிச்சிட்டாரு!

விரைவில் வெளியாக உள்ள மலையாளப் படமான ‘ஒரு ஆடார் லவ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருப்பவர் பிரியா வாரியர். இவர் நடித்த படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தற்போது இவர் இந்தியா முழுவதும் பிரபலம். எதனால் என்பதை மூன்று வயது குழந்தை கூட சொல்லும்.

 

சேதி என்னவென்றால், இந்திய அளவில் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பிரியா வாரியரை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரன்வீர் சிங் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், சூர்யாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்க இருக்கும் படத்தில் பிரியா ஆனந்தை நடிக்க வைக்க, கே.வி.ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை கே.வி.ஆனந்த் மறுத்துவிட்டார்.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘சூது கவ்வும்’, ’காதலும் கடந்து போகும்’ போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி, தான் இயக்கும் புது படத்திற்கு பிரியா வாரியரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய விபரங்களை நலன் விரைவில் அறிவிக்க உள்ளாராம்.