Apr 30, 2018 05:25 PM

’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிகர்களின் லுக் - வைரலாகும் புகைப்படம் உள்ளே

’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிகர்களின் லுக் - வைரலாகும் புகைப்படம் உள்ளே

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியதால் படப்பிடிப்பு தொடங்க வில்லை. மேலும், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதில் தீவிரமாக இருந்தனர்.

 

இதற்கிடையே, பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், என்பதைக் காட்டிலும் இதில் நடிகர்களின் லுக் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. தற்போது வேலை நிறுத்த போராட்டம் முடிவடைந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் உள்ளார்கள்.

 

ChekkaSivanthaVaanam

 

நடிகர்கள் அனைவரும் ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.