May 04, 2018 11:13 AM

கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வேன் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான்!

கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வேன் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான்!

மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நடிகர் மன்சூரலிகான், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற போது, தரக்குறைவாக பேசியதாக கூறி போலீசார் கைது செய்தனர். அவருடன் கைதான சில சினிமா பிரபலங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்சூரலிகான் மட்டும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து புயல் சிறையில் இருந்த அவரை விடுவிக்க வேண்டும், என்று சில நடிகர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட வந்த மன்சூரலிகான், அங்கு செய்தியாளர்களிடம் பேசும் போது, “சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதை கேள்விப்பட்டு அதனை பார்ப்பதற்காக வந்துள்ளேன். மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைந்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

 

அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக் கூடாது. இதற்காக போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டி வழிச்சாலை அமைந்தால் எட்டுபேரை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்.” என்று தெரிவித்தார்.

 

ஏற்கனவே, சர்ச்சையாக பேசியதால் சிறைக்கு சென்ற மன்சூர் அலிகான், மீண்டும் சர்ச்சையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.