Jun 04, 2020 02:26 PM

நயன்தாரா, சிம்பு திருமணம் பற்றிய புது தகவல்

நயன்தாரா, சிம்பு திருமணம் பற்றிய புது தகவல்

சிம்புவும், நயன்தாராவும் காதலித்து பிரிந்த கையோடு, வேறு ஒரு காதலில் ஐக்கியமானார்கள். சிம்பு ஹன்சிகாவை காதலிக்க, நயன்தாரா பிரபு தேவாவை காதலித்தார். இரண்டு ஜோடிகளும் திருமணம் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், திடீரென்று இரண்டு காதல்களும் தோல்வியடைந்தன. 

 

நயன்தாரா, ஹன்சிகா என்று இரண்டு காதல் தோல்விகளை கடந்த சிம்பு, மூன்றாவது காதலியை தேடாமல் தனது வேலையை பார்க்க தொடங்கிவிட்டார். ஆனால், நயன்தாராவோ இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் மூன்றாவது காதலை தொடங்கி தற்போது வரை அதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

 

சினிமா மற்றும் காதல் இரண்டிலும் நயன்தாரா பிஸியாக இருந்தாலும், சிம்பு சினிமா வாழ்க்கையிலும் ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்த நிலையில், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சித்து வருகிறார்கள். இதற்காக பெண் தேடியும் வருகிறார்கள்.

 

மறுபக்கம் நயன்தாரா எப்போது திருமணம் செய்துக் கொள்வார்! என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆமாங்க, நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கோவில் ஒன்றில் மிக எளிமையான முறையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதேபோல், சிம்புவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அவரது உறவு முறையில் பெண் பார்த்துவிட்டதாக, அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான விடிவி கணேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு காதல் தோல்விகளை பார்த்த சிம்பு மற்றும் நயன்தாரா இருவருக்கும் திருமணம் என்ற தகவலால் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.