May 28, 2018 10:01 AM

நயந்தாராவை அசத்திய பிரபலம்!

நயந்தாராவை அசத்திய பிரபலம்!

நடிகைகளின் சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்திருக்கும் நயந்தாரா, எப்படி பரபரப்பாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாரோ, அதெபோல் தனது காதலாலும் அவ்வபோது பரபரப்பு ஏற்படுத்திவிடுகிறார்.

 

ஆனால், இப்ப நாம சொல்ல இருப்பது, பலரை அசத்தும் நயந்தாராவையே ஒருவர் அசத்தியிருப்பதை தான்.

 

நயந்தாரவின் காஸ்ட்யூம் டிசைனர், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பியுள்ளார். இதற்காக நிறுவனம் ஒன்றை அவர் அனுகியவர், நயந்தாராவுக்கு இசை என்றால் ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த நிறுவனமும் இசையை மையமாக வைத்து நயந்தாராவுக்கு சில சர்பிரைஸ் கொடுத்திருக்கின்றனர்.

 

அவர்கள் கொடுத்த அனைத்து சின்ன சின்ன சர்பிரைஸும் நயந்தாராவுக்கு பிடித்துப் போக, இறுதியாக காஸ்ட்யூம் டிசைனரை பாராட்டி தள்ளியவர், தனக்கு சர்பிரைஸ் கொடுத்த நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். 

 

இந்த தகவலை அந்த சர்பிரைஸ் நிறுவனமே வெளியிட்டு பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.