May 02, 2018 12:55 PM

காதலருடன் உலக புகழ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நயந்தாரா!

காதலருடன் உலக புகழ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நயந்தாரா!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழும் நயந்தாராவுக்கு கையிருப்பு ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. அஜித், கமல்ஹாசன், சிரஞ்சீவி என்று மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர், நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நயந்தாரா, அவ்வபோது தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுக்காக வாய்ப்பு தேடுவதிலும் மும்முரம் காட்டி வருவபர், விரைவில் விக்னேஷ் சிவனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரித்து அதில் தானே ஹீரோயினாகவும் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நயந்தாரா, அங்கு நடைபெறும் கோச்செல்லா இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அமெரிக்காவின் பிரபலமான இசை நிகழ்வான இந்த நிகழ்வு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.