May 09, 2018 11:12 AM
கார் விபத்தில் சிக்கிய நடிகை பார்வதி!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி. தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் இவருக்கு ‘டேக் ஆப்’ என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில், இந்நிலையில் நடிகை பார்வதி சென்ற கார் நேற்றிரவு திடீரென விபத்தில் சிக்கியது. ஆலப்புழா அருகே கொம்முடி தேசிய நெடுஞ்சாலையில் நடிகை பார்வதி சென்ற கார் மீது இன்னொரு கார் திடீரென மோதியது.
அதிர்ஷ்டவசமாக இதில் பார்வதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஆலப்புழா போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.