Nov 22, 2020 06:40 AM
கார் மோதி இளைஞர் மரணம் - சினேகன் மீது போலீசார் வழக்குப் பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானதோடு, சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த 16 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் காரில் சினேகன் பயணம் செய்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் கார் மீது மோதியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பயணித்த அருண்பாண்டி என்ற இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, போரூரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சினேகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.