Apr 10, 2018 11:02 AM

பாலிவுட்டுக்கு குட்பை சொல்லும் பிரபு தேவா!

பாலிவுட்டுக்கு குட்பை சொல்லும் பிரபு தேவா!

நடன இயக்குநர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த பிரபு தேவா, பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி அதிரடி காட்ட தொடங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரானார். இதனை தொடர்ந்து நடிப்பதைக் காட்டிலும் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களின் பேவரைட் இயக்குநராக உருவெடுத்தார்.

 

இதற்கிடையே விஜய் இயக்கத்தில் உருவான ‘தேவி’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கிய பிரபு தேவா, அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் ‘மெர்க்குரி’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது அவர் ‘சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்து வருவதோடு, அப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். ஆனால், மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு தண்டனை கிடைத்திருப்பதால், அவரை வைத்து உடனே படம் தொடங்குவது கேள்விக்குரியாகியுள்ளது.

 

இதனால் பாலிவுட்டுக்கு கொஞ்சம் காலம் குட்பை தெரிவித்திருக்கும் பிரபு தேவா, தொடர்ந்து நடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.

 

’சார்லி சாப்ளின் 2’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கும் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.