May 05, 2018 07:17 AM

பிரியங்கா சோப்ராவை முன்னணி ஹாலிவுட் ஹீரோவுடன் ஜோடி சேர்க்கும் யூடியூப்!

பிரியங்கா சோப்ராவை முன்னணி ஹாலிவுட் ஹீரோவுடன் ஜோடி சேர்க்கும் யூடியூப்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.

 

பிரியங்கா சோப்ரா, நடிக்கும் ‘குவாண்டிகோ’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அவர் ஹாலிவுட் நடிகர் ராக்குடன் சேர்ந்து நடித்த ‘பேவாச்’ படத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

 

இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா அடுத்து வில்ஸ்மித்துடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் வெப் சீரிஸ் ஒன்றில் ஜோடி சேர இருக்கிறார்களாம். இந்த வெப் சீரியஸை யூடியூப் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.