முன்னணி நிறுவனத்திற்காக ஒன்றாக கைகோர்க்கும் ரஜினி - விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள ரஜினிகாந்திற்கு பிறகு அவரது இடத்தை நிரப்பக் கூடியவர் விஜய் தான் என்பது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் அறிந்த ஒன்று தான் என்றாலும், ரஜினி - விஜய் ஒன்றாக சேர்ந்து நடிப்பார்களா? என்பது யாரும் அறியாத ஒன்றாகவே இருக்கிறது.
படத்தில் ஒன்றாக இணையவில்லை என்றாலும், பிரம்மாண்டமான விழா ஒன்றில் இருவரும் ஒன்றாக கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரம்மாண்டமான விழாவாக நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஷன் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் ‘பேட்ட’ பட டீசரை, விஜயின் ‘சர்கார்’ பட இசை வெளியீட்டு மேடையில் வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி - விஜய் இருவரையும் ஒன்று சேர்த்து, பேட்ட மற்றும் சர்கார் பட விழாக்களை பிரம்மாண்டமான விழாவாக நடத்தவும் சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம்.