May 05, 2018 07:07 AM

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!

மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக கடந்த மாதம் 25 ஆம் தேதி அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை திரும்பினார்.

 

கடந்த 10 நாட்களாக அமெரிக்காவில் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்ட ரஜினிகாந்த், அங்கு மெட்ரோ ரயிலில் பயணிப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது. அவர் சென்னையில் இருந்து வந்ததும், புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்பதால், அவரது வருகைக்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர்.

 

இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் மே 9ம் தேதி நடைபெறும் ’காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.

அதன்பின் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார்.