May 09, 2018 10:47 AM

அரசியலில் இறங்கும் ஆர்.ஜெ.பாலாஜி! - வைரலாகும் விளம்பரம்

அரசியலில் இறங்கும் ஆர்.ஜெ.பாலாஜி! - வைரலாகும் விளம்பரம்

சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் என பல சமூகப் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆர்.ஜெ பாலாஜி, ரஜினியின் அரசியல் வருகை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஆர்.ஜெ.பாலாஜி விரைவில் அரசியலில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ஆர்.ஜெ.பாலாஜியின் அரசியல் விளம்பரம் தொடர்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில், இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் காணும் ஆர்.ஜெ. பாலாஜியை வரவேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மே 18ஆம் தேதி அண்ணனின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் என்று சில பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 

 

RJ Balaji

 

ஆனால் இந்த சுவர் விளம்பரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்த விவரங்கள் சரியாக தெரியவில்லை.