May 19, 2018 09:06 AM

ஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்!

ஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்!

பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’ (Tamilnadu Defender & Escorts Association) என்ற புதிய சங்கத்தை இன்று (மே 19) தொடங்கி வைத்தார்.

 

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பவுன்சர்ஸ் என்று சொல்லக்கூடிய பாதுகாவலர்களுக்கான புதிய சங்கமாக உருவாகியுள்ள இந்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ்’ சங்கத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த புதிய சங்கத்தை பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார். 

 

இன்று ஆர்.கே.சுரேஷின் பிறந்தநாள் என்பதால், ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’-ன் நிறுவனர் மற்றும் தலைவர் மொகமத் உமர், செயலாளர் சலீம், பொருளாளர் ஆனந்த், துணை தலைவர் சங்கீதா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆர்.கே.சுரேஷுக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆர்.கே.சுரேஷும், இன்று உதயமாகும் இந்த புதிய சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.