May 09, 2018 01:54 PM

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்!

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்!

சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. அறிமுக இயக்குநர் விக்கி என்பவர் இயக்கும் இப்படத்தில் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் ஐ.ஏ.எஸ், படம் குறித்து கூறுகையில், “டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம்  செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில்  இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும்  அநீதிக்கு எதிராகப்  போராடி வரும்  போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. 

 

துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  படத்தில்  டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன்.  இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும்  என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்." என்று பாராட்டியுள்ளார்.

 

இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மனைவியாக ரோகினி நடிக்க, பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி மற்றுமொரு பிரபல நடிகரும் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். பிரபாகர் எடிட்டிங் செய்ய, ஏ.வனராஜ் கலையை நிர்மாணித்துள்ளார். அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கிரீன் சிக்னல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.