May 06, 2018 01:06 PM

சினிமாவில் அந்த விஷயம் இருக்கிறது - வெளிப்படையாக பேசிய சமந்தா!

சினிமாவில் அந்த விஷயம் இருக்கிறது - வெளிப்படையாக பேசிய சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் அவருக்கு ரசிகர்களிடம் மவுசு குறையவில்லை.

 

ராம்சரனுக்கு ஜோடியாக சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. தமிழில் விஷாலுக்கு ஜோடியாக ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது.

 

‘இரும்புத்திரை’ படத்திற்காக புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது, என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

இது குறித்து மேலும் பேசிய அவர், படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது. அதேசமயம் இந்த துறை மட்டுமல்லாமல் எல்லாதுறையிலும் இதுபோன்ற கேவலமான அவலம் உள்ளது. சினிமாவைப் பொருத்தவரை அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. நிறைய நல்லவர்கள் இருக்கின்றனர். சில கருப்பு ஆடுகள் தான் இதுபோன்ற கேவலமான செய்கையில் ஈடுபடுகிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.