Apr 30, 2018 09:27 AM

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘சில சமயங்களில்’

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ‘சில சமயங்களில்’

பல்வேறு விதமான ஜானர்களில் படம் எடுத்து இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் பிரியதர்ஷன், அவ்வபோது கலைப்படங்களை எடுத்தும் பாராட்டுப் பெற்று வருகிறார். அந்த வகையில், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘சில சமயங்களில்’. 

 

உலக சினிமாவுக்கான திரைப்படமாக உருவாகியுள்ள ‘சில சமயங்கள்’ வரும் மே 1 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.

பல்வேறு டிஜிட்டல் நிறுவனங்கள் மக்களின் வீட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தி வர, அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக விளங்கும் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் பலர் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, தற்போது பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சில சமயங்களில்’ படம் இந்த பெரிய நிறுவனத்தை ஈர்த்திருக்கிறது. 

 

டிராமா வகையை சேர்ந்த இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் மற்றும் வருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் விஜயின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார் டாக்டர் கணேஷ். இந்த படம் வரும் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.