Sep 08, 2018 10:46 AM

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்!

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்!

மலையாள சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக இருக்கும் வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் சினிமாவிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். வித்தியாசமான குரல் வலம் கொண்ட இவர், ‘வீர சிவாஜி’, ‘என்னமோ ஏதோ’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார்.

 

விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால், இவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருமணம் நின்று போனது.

 

இந்த நிலையில், பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும், வைக்கம் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் செப்டம்பர் 10 ஆம் தேதி விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெற உள்ளது. திருமணம் அக்டோபர் 22 ஆம் தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெற உள்ளது.

 

பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான மாணவி ஹனன் ஹமீது, விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயகுமார் இயக்குகிறார்.