May 20, 2018 03:59 PM

சுஜா வாருணியால் வெடித்த சர்ச்சை! - பெயரை மாற்றிக்கொண்ட சிவாஜி பேரன்

சுஜா வாருணியால் வெடித்த சர்ச்சை! - பெயரை மாற்றிக்கொண்ட சிவாஜி பேரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகரக்ளிடம் பிரபலமானவர் நடிகை சுஜா வாருணி. இதற்கு முன்பு சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், மக்களிடம் அவரை கொண்டு சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

 

பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் சுஜா வாருணிக்கு, சினிமா பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும், நட்சத்திர கலை நிகழ்ச்சி, கடை திறப்பு போன்றவைகள் நன்றாக கைகொடுத்து வந்தது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த பப்ளிசிட்டியாலும் அவர் காட்டில் நல்ல மழை தான்.

 

இதற்கிடையே, சுஜா வாருணியும், சிவாஜி பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்த சுஜா வாருணி, தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, சாமி தரிசனத்திற்காகவே சிவாஜி தேவுடன் கோவிலுக்கு சென்றேன், என்று விளக்கம் அளித்தார்.

 

மேலும், சிவாஜி தேவ் என்று அவரை குறிப்பிடுவதும், அவரை சிவாஜியின் பேரன் என்று குறிப்பிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால், சிவாஜி குடும்பத்தில் சர்ச்சை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், சிவாஜி தேவ், தனது பெயர் சிவகுமார் என்று திடீரென்று சமூக வலைதளத்தில் அறிவித்திருப்பதோடு, சுஜா வாருணியோடு தான் 11 ஆண்டுகளாக பழகி வருகிறேன், என்று தெரிவித்து, ஒருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

சிவாஜியின் பேரன் என்ற அறிமுகத்தோடு சினிமாவி அறிமுகமான சிவாஜி தேவ், திடீரென்று தனது பெயர் சிவகுமார் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.