May 06, 2018 05:04 PM

சிவகார்த்திகேயன் படத்தின் புதிய தகவல்!

சிவகார்த்திகேயன் படத்தின் புதிய தகவல்!

‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயம் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘சீமராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

 

சினிமா வேலை நிறுத்தத்தால் தடைப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, வேலை நிறுத்தம் முடிந்த பிறகு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம். இதையடுத்து, வரும் மே 15 ஆம் தேதி முதல் டப்பிங் பணிகளை படக்குழுவினர் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனுக்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம், மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இப்படத்தை தொடர்ந்து, ராஜேஷ், சிவா, ரவிக்குமார் ஆகியோரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.