Jun 04, 2018 01:56 PM
விஜயகாந்திடம் வாழ்த்துப் பெற்ற நடிகர் சௌந்தரராஜா - தமன்னா தம்பதி

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இருவரும் இன்று தம்பதியராக தே.மு.தி.க. தலைவரும் தமிழ் சினிமாவின் கேப்டனுமாகிய விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுபற்றி நடிகர் சௌந்தரராஜா கூறுகையில், “தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன்.
எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய புரட்சிக்கலைஞருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.