சர்ச்சை இயக்குநருடன் இணைந்த சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால், அவருக்கு தடை விதித்த தெலுங்கு நடிகர்கள் சங்கம், ஸ்ரீரெட்டியை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது, என்றும் எச்சரித்தது.
நடிகர்கள் சங்கத்தின் தடை உத்தரவுக்கு எதிராக அரை நிர்வாண போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியதை தொடர்ந்து தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது.
இந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பிரபல சர்ச்சை இயக்குநர் ராம்கோபால், வர்மா ஸ்ரீரெட்டியை தனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்துள்ளார். அவருக்காக ராம்கோபல் பிரத்யேகமாக கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.