May 04, 2018 03:46 PM

அஜித்தின் புதிய படத்தில் திடீர் மாற்றம் - இயக்குநர் விலகல்!

அஜித்தின் புதிய படத்தில் திடீர் மாற்றம் - இயக்குநர் விலகல்!

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்து வந்த அஜித், தற்போது நான்காவது முறையாகவும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். ‘விசுவாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 7 ஆம் தேதி ஆந்திராவில் தொடங்க உள்ளது.

 

இப்படத்திற்குப் பிறகு அஜித்துக்கு இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அஜித் ரசிகர்கள் அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகும் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்து வந்தனர்.

 

இந்த நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கப் போவதில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், விஷ்ணுவர்தன் பாலிவுட் படத்தை இயக்க சென்றுவிட்டார். விஷ்ணுவர்தன் இயக்க உள்ள பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்கோத்ரா ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

 

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதமாவதால், படம் முடியவும் காலதாமதமாகும் என்று கருதிய விஷ்ணுவர்தன், அதுவரை சும்மா இருக்க வேண்டாம், என்று பாலிவுட் பக்கம் போய்விட்டார். அவரது இந்த முடிவு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.