Oct 26, 2018 07:29 AM

விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு யு சான்றிதழ்!

விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு யு சான்றிதழ்!

விக்ரம் பிரபு முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் ‘துப்பாக்கி முனை’. ஹீரோயினாக ஹன்சிகா நடிக்கும் இப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

 

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார்.

 

இப்படம் சமீபத்தில் சென்சார் குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்தவித கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

Thuppakki Munai